Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டமன்ற கூட்டத்தொடர்: எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி குற்றச்சாட்டு

ஆகஸ்டு 18, 2019 01:41

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பேசவிடாமல் தடுப்பதாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தின் 2019-20ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் கூட்டத்தில், நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்கட்சியினர் எவ்வாறு செயல்படுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 

கூட்டத்தை தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி, புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு கடந்த 3ஆண்டு காலத்தில் மக்களுக்கு தேவையான எந்த ஒரு புதிய திட்டங்களை செயல்படுத்தாமல் மிகவும் மோசமான சூழ்நிலை உள்ளதாகவும் மத்திய அரசு மற்றும் துணைநிலை ஆளுநரை குறை கூறியே முதல்வர் நாராயணசாமி ஆட்சி நடத்தி வருவதாக குற்றம் சுமத்தினார்.

மேலும் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பேசவிடாமல் தடுப்பதாகவும் பகிரங்கமாக தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்