Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக முதல்வர் ஒருவர் தொழில் வளர்ச்சிகளை ஈர்க்க வெளிநாடு செல்வது இதுவே முதல்முறை

ஆகஸ்டு 25, 2019 06:56

ஆவடி: தமிழகம் முழுவதும் நீர் மேலாண்மை குறித்த சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து ஆவடி அடுத்த நெமிலிச்சேரியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. 

இதற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்க தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அப்பகுதி மக்கள் குடிநீர் சாலை வசதி வேண்டி கோரிக்கைகளை வைத்தனர் அதனை விரைவில் சரி செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.

இந்த சிறப்பு கிராம சபையில்  திருவள்ளுர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல் அபிநயன் சக்தி,  4 கோடியே 64லட்சத்தில் தொடங்கி பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் 5 முக்கிய அம்சமாக  மழைநீர் சேமிப்பு, வீடுதோறும் மரம் வளர்ப்பு, ஏரி, குளம், தூர்வாரும், பணி, மற்றும் குழாய் மூலம் வீடுகளுக்கு  தண்ணீர் கிடைக்கு வழி வகை செய்யப்படுவதே நீர் வளம்மேம்பாட்டு திட்டத்தின் முக்கிய பணி என்று அமைச்சர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக முதல்வர் ஒருவர் தொழில் வளர்ச்சிகளை ஈர்க்க வெளிநாடு செல்வது இதுவே முதல்முறை. ராகுல்காந்தி 2 மாதம் காணாமல் போனதுபோல இல்லாமல் எங்கு போகவுள்ளர் எந்த நிறுவனங்களை சந்திக்குள்ளார் என்பன கூறியுள்ளார். விரிவான தகவல் விரைவில் வெளியாகும் என தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட நீர் வள  மேலாண்மை அதிகாரி மம்தா சங்கர் திருவள்ளூர் மாவட்ட மேலாண்மை இயக்குனர் திருமதி ரத்னா, ஆவடி வட்டாட்சியர் சரவணன் துணை வட்டாட்சியர் செந்தில், பூவிருந்தவல்லி  பஞ்சாயத்து வளர்ச்சி  அதிகாரி சாந்தி, ஊராட்சி செயலர்  இந்திரா, திருநின்றவூர் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயா நிமிலிச்சேரி ,கிராம அலுவலர் சிவா மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்