Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அருள்மிகு ஸ்ரீ துலுக்காணத்தம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் விழா

ஆகஸ்டு 25, 2019 02:06

திருவள்ளூர்: சென்னை அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டில் அருள்மிகு ஸ்ரீ துலுக்கானத்தம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 90 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த ஆலயத்தின் நிர்வாகி சிவாச்சாராரியார்  சட்ட நாராயணன்  தலைமையில் கடந்த 15ஆம் தேதி ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ ஷண்முகர் ஹோமம், ஸ்ரீ நவக்கிரஹ ஹோமம் துவங்கி விக்னேஷ்வர பூஜை, புன்யாக வாஜனம் மற்றும் முதல்கால யாகபூஜை நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து இரண்டாம் கால மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.பின்னர் முக்கிய நிகழ்வாக காலை நான்காம் கால யாக பூஜை நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பாரம்பரிய இசை வாத்தியங்களுடன் அருள்மிகு ஸ்ரீ துலுக்காணத்தம்மன் ஆலயம் ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ பாலமுருகன் மற்றும் விமான கலசம் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் விழா முடிவில் கோயில் நிர்வாகி கூறியதாவது, இந்தக் கோவிலின் சிறப்பம்சமாக அம்மன் மீது வைக்கின்ற எலுமிச்சை பழத்திற்கு தனி சிறப்பு உண்டு. இதனை உண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் மற்றும் நினைத்த காரியம் இனிதே நிறைவேறும் என்றார்.

தலைப்புச்செய்திகள்