Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அறிவியல் வளர்ச்சி இயக்கம் மூன்றாம் ஆண்டு நிறைவு, யோகா நூல் வெளியீடு விழா

ஆகஸ்டு 30, 2019 03:52

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாளில்  அறிவியல் வளர்ச்சி இயக்கம் மூன்றாம் ஆண்டு நிறைவு, யோகா நூல் வெளியீடு விழா, நல்லாசிரியர் நன்மாணக்கர் பாராட்டு விழா என முப்பெரும் விழா வேலவன் திருமண மண்டபத்தில் அறிவியல் வளர்ச்சி இயக்கம் பாரத பிரதமர் விருது பெற்ற பாதுகாப்புத்துறை விஞ்ஞானி பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்றது,

இவ்விழாவில் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன் நிகழ்ச்சியில் காசிமடம் அதிபர் முத்துகுமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர்  நல்லாசிரியர் விருது மற்றும் மாணவ மாணவிகளுக்கு விருதுகளை வழங்கினார்கள். 

நிகழ்ச்சியில் ஆசிரியர் பெருமக்கள் கழக தொண்டர்கள் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்