Sunday, 19th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனி வட்டாட்சியர் லஞ்சம் பெற்றுக்கொண்டு தனிநபருக்கு பட்டா வழங்குவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு

ஆகஸ்டு 30, 2019 04:56

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்  தொகுதிக்கு உட்பட்ட தண்டராம்பட்டு அடுத்த தரடாப்பட்டு கிராமத்தில் 1984 ஆம் ஆண்டு ஆதி திராவிட மக்களுக்கு என ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சுமார் 100க்கு மேற்பட்ட வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. 

வழங்கிய வீட்டுமனை பட்டாவின்  அருகில் பொது பயன்பாட்டுக்காக சுமார் 50 சென்ட் இடத்தை பிற்கால பொது பயன்பாட்டிற்காகவும் அரசுப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் சமுதாயக்கூடம் உள்ளிட்ட கட்டடங்களை கட்டுவதற்காக இடம் ஒதுக்கப்பட்டது.

தற்பொழுது செங்கம் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியராக பணிபுரியும் ரமேஷ் அரசு மூலம் வழங்கிய வீட்டு மனை அருகில் அந்த மக்களின் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்கன்வாடி மையம் அல்லது சமுதாயக்கூடம் ஏதும் கட்டாமல்  சில தனி நபர்களிடம் சுமார் ஒருவேறு நபரிடம் 20 ஆயிரம் என சுமார் 10 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு பொது இடத்தில் பட்டா வழங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாற்று வைக்கின்றனர்.

மேலும் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை லஞ்சம் பெற்றுக் கொண்டு தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலமுறை புகார் அளித்தும் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் மெத்தனம் காட்டி வருகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காவிட்டால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களின் ஆதார் அட்டை வாக்காளர் அட்டை குடும்ப அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம்  உடனடியாக தலையிட்டு பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தனி நபர்களுக்கு பட்டா வழங்குவதை தடுத்து நிறுத்தி பொது இடத்தில் சமுதாயக்கூடம் அல்லது அங்கன்வாடி மையம் உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்