Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா

செப்டம்பர் 02, 2019 11:24

கும்பகோணம்: கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். 

அந்த வகையில் இந்தாண்டும் இவ்விழா களை கட்டியுள்ளது. முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்து மக்கள் கட்சி சார்பில் மடத்துத் தெருவில் வைக்கப்பட்டுள்ள சயன விநாயகருக்கு கஜ பூஜை, கோ பூஜை, உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. 

இதில் ஏராளமான பெண்கள் ஆரத்தி தட்டு ஏந்தி வழிபட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போன்று பாலக்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகருக்கு கோ பூஜை, அஷ்வ பூஜை, சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. 

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இது போன்று  நகரில் 54 இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், நாளை காவிரி ஆற்றில் கரைக்கப்படும்.

தலைப்புச்செய்திகள்