Saturday, 1st June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துளிர் அமைப்பின் சார்பில் விதை பந்துகள் உருவாக்கும் முயற்சி

செப்டம்பர் 09, 2019 07:08

திருவண்ணாமலை: சாணர் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் துளிர் அமைப்பின் சார்பில் விதை பந்துகள் உருவாக்கும் முயற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி  தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள் மற்றும் நமது  துளிர் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விதை பந்துகள் தயாரிக்க வேம்பு, புளியன், தேக்கு,  மலைவேம்பு, கடுக்காய்  மற்றும் வாகை விதைகள் பயன்படுத்தப்பட்டன. மாணவர்களின் ஆர்வம் மற்றும் கடின உழைப்பால் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதை பந்துகள் வெற்றிகமாக உருவாக்கப்பட்டது.

பள்ளி மாணவ-மாணவிகளால் தயாரிக்கப்பட்ட விதை பந்துகளை கொம்மனந்தல், சாணர்பாளையம், புலிவானந்தல் உள்ளிட்ட அந்த பகுதிகளில் உள்ள மலைகளில் புதன் கிழமை காலை தூவப்படுகிறது என துளிர் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்