Friday, 29th March 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செண்பகதோப்பு அணையை சீரமைப்பு செய்யவில்லை என்றால் உண்ணாவிரதம் நடத்தப்படும்: பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.

செப்டம்பர் 10, 2019 07:28

போளூர்: 
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேடு அருகே செண்பகதோப்பு அணை 20 ஆண்டுகளுக்கு முன்பு 34கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டது. அணையில் மதகுகள் பொருத்தப்பட்ட ஷெட்டர்கள் அமைக்கப்பட்டது ஷெட்டர்கள் அமைக்கும் போதே பழுதானது.

இதனால் செண்பகதோப்பு அணை இன்று வரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது செண்பக தோப்பு அணையை சீரமைக்க கோரி விவசாயிகள் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் கடந்த ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற எம்.ஜீ.ஆர் நூற்றாண்டு விழாற்க்கு வருகை தந்த தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செண்பகதோப்பு அணையை சீரமைக்க ரூபாய் 10கோடி மதிப்பீட்டில் அணைமதகு சீரமைப்பு செய்யப்படும் என அறிவித்தார்.

தமிழகமுதல்வர் செண்பகதோப்பு அணை சீரமைப்பு செய்யப்படும் என அறிவித்து 2ஆண்டுகள் ஆகியும் பணிகள் தொடங்காததால் வேதனை அடைந்த விவசாயிகளும் பொதுமக்களும் அணையை சீரமைக்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இந்நிலையில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வரும் 20ம் தேதிக்குள் அணையின் ஷெட்டரை தமிழக அரசு சீரமைப்பு செய்ய உத்தரவிடவேண்டும்.

இல்லையென்றால் வரும் 21ம்தேதி 54ஊராட்சி சேர்ந்த 25ஆயிரம் விவசாயிகளை சேர்த்து படவேடு வீரகோவில் மைதானத்தில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என கூறப்பட்டுள்ளது. ஆளும் கட்சிக்கு எதிராக ஆளும் கட்சி எம்.எல். ஏ போராட்டம் நடத்துவேன் என்று சொல்லி இருப்பது திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்