Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனியார் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

அக்டோபர் 08, 2019 11:25

கும்பகோணம்: கும்பகோணத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமியன்று குந்தைகளை பள்ளியில் சேர்த்து எழுத்தறிவித்தால் அவர்கள் கல்வி, வேள்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.

இந்நிலையில் கும்பகோணம் கொரநாட்டுக் கருப்பூரில் உள்ள தனியார் சர்வதேச மற்றும் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியையொட்டி, பூஜைகள் நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு நவதானியங்களான நெல், துவரை, உளுந்து, பச்சை பயறு, மொச்சை, எள், கோதுமை, கொண்டைகடலை, கொள்ளு ஆகியவற்றில் தமிழின் முதல் எழுத்தான அவ- வை எழுதி கல்வியை ஆசிரியர்கள் தொடங்கி வைத்தனர்.

அவர்களுக்கு புத்தகங்கள், மற்றும் கல்வி உபகரணங்களை பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் வழங்கினார்.

இன்று தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக பெறோர் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்