Wednesday, 12th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும்

மார்ச் 01, 2019 11:41

புதுடெல்லி: பாராளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வருகிறார். 

தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாரான நிலையில் எல்லையில் பதட்டமான நிலை நேரிட்டது. புல்வாமா தாக்குதல், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களில் இந்தியா பதிலடி தாக்குதல், பாகிஸ்தான் அத்துமீறல் என எல்லையில் போர் பதற்றம் நிலவியது. இதனால் தேர்தல் சரியான நேரத்தில் நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது. 

இந்நிலையில், பாராளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட வந்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, பாராளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடக்கும் என தெரிவித்துள்ளார். 

தலைப்புச்செய்திகள்