Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நந்தனின் ‘பிரபா’ திரைப்படம்

மார்ச் 04, 2019 10:23

பெண்கள் முன்னேற்றம் என்றால், ஆண்களைப் போன்ற எல்லா உரிமைகளும் வசதிகளும் பெற்றிருப்பதுதான். “நள்ளிரவில் அழகான ஒரு சிறு  பெண் தன்னந்தனியே சில மைல்கள் நடந்து செல்லக்கூடிய சமூக அமைப்பு ஏற்பட்டாலொழிய நம் நாட்டில் நாகரிகம் வளர்ந்திருக்கிறது  என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.” என்று காந்தியடிகள் கூறியுள்ளார்.  

இன்று படிப்பும், நாகரிகமும் வளர வளர, பெண்களின் உரிமையும் வளருவதாக வெளியில் தெரிந்தாலும் அது எந்தளவிற்கு உண்மை என்பது  கேள்விக்குறிதான். நிமிடத்திற்கு நிமிடம் வாழ்வில் பல்வேறு திருப்பங்கள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி, பெண்கள்  பாதுகாப்பிற்கான வசதிகள் என ஒருபுறம் பெருகி கொண்டே வந்தாலும் மறு புறம் பெண்களுக்கெதிரான வன்கொடுமைக ளும் பெருகி  கொண்டேதான் வருகிறது.  

இதை தடுக்க பெண்களும் முயற்சிக்க வேண்டும். தன்னுடன் ஆண் இருந்தால் மட்டுமே நம் பிரச்சனையை தீர்க்க முடியும் என்கிற மனநிலையை  மாற்றி, நம்மால் நம் பிரச்சனையை தீர்க்க முடியும் என்கிற மனதைரியத்தோடு போராட வேண்டும். இவைகளை பசுமரத்தாணி போல மனதில்  பதிய வைப்பதுதான் பிரபா திரைப்படம்...  

இன்றைய காலக்கட்டத்தில் திரைப்படம் என்பது மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. என்னதான் மேடை போட்டு மணிகணக்கில் பேசினாலும் சரி, புத்தகங்கள் வாயிலாக எழுதினாலும் சரி, சமூக வலை தளங்களில் பரப்பினாலும் சரி அவைகள் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டதோடு மறதியாகிறது.   

ஆனால் திரைப்படம் என்கிற ஒன்று மட்டும்தான் என்றும் மனதில் நிலைத் திருக்க கூடியதாகிறது. அதிலும் வியா பரத்தை மட்டுமே மையமாக வைத்து தயாரிக்காமல்  அனைத்து தரப்பினரும் ரசிக்க கூடிய, சிந்திக்க கூடிய ஜனரஞ்சகமானதாக உருவாகும் படைப்புதான் அனைவரையும் பிரம்மிக்க வைக்க கூடியதாக அமையும். அப்படி உருவானது தான் பிரபா....   

பிரபா பற்றி என்ன சொல்கிறார் அதன் இயக்குனர் நந்தன்...?  

என்னதான் பெண் களுக்கு முன்னேற்றம் ஏற்பட்டாலும் அவர்களுக்கான 33 சதவீத மசோதா இன்றுவரை நடைமுறைப்படுத்த முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால்  என்னுடைய இந்த திரைப்படத்தில் பெண்களின் பங்களிப்பை 90% ஆக்கி யுள்ளேன். அதோடு இந்தப்படம் கதாநாயகியை முன்னிலைப்படுத்தியே எடுக்கப் பட்டுள்ளது.  

பெண்கள் பொதுவாக தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று மனந்தளராமல், நாம் எப்படி வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று யோசிக்க தொடங்கினால் போதும், அதுதான் அவர்களுக்கான முதல் வெற்றி.   

பெண்கள் பிரச்சனைகள் பற்றி ஒரு நல்ல தமிழ் திரைப்படம் வெளிவரவேண்டும் என்று எண்ணினேன். அதற்கான முயற்சியில் நான் தீவிரமாக இறங்கிதோடு நானே தயாரித்து, இயக்கிய படம்தான் பிரபா. இது முழுக்க முழுக்க பெண்கள் பிரச்சினைகளை பற்றியே பேசக்கூடியப்படம்.  
பல புதுமுக நடிகர்களே இதில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வருபவர் மூன்று வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கூறிய தால் ஆரம்பத்தில் பல நடிகைகள் தவிர்த்து சென்று விட்டனர். ஆனால் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு நடிக்க வந்தவர் நடிகை சுவாசிகா.   

இதில் முக்கியமான ரோலில் நடிக்கும்  கதாபாத்திரத்தின் பெயர் தான் பிரபாவதி. இதன் சுருக்கமே படத்தலைப்பு. மேலும் இப்படத்தின் இசையமைப்பாளராக எஸ்.ஜே. ஜனனி, பாடலா சிரியராக ஸ்ரீதேவி, பாடகி சௌம்யா தணிகாச்சலம், ஆடை வடிவமைப்பாள ராக தேன்மொழி நந்தன் மற்றும் குழந்தை நட்சத்தி ரமாக பேபி தமிழிசை ஆகி யோரை அறிமுகப்படுத்தியுள்ளேன். என்னைப் பொறுத்தவரை கலைக்குத்தான் முக்கியத்துவம் தருவேன். வியாபாரம் என்பது எனக்கு இரண்டாம்  பட்சம்தான். ஆனால் இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ளது.  

திரைப்படம் என்பது ஒரு பொழுது போக்கு விஷயமாகதான் வெளியில் இருப்பவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் அதன் உள்ளே இருக்கும் போராட்டங் கள் எங்களுக்குதான் தெரியும். ஒரு நிமிடம் வரும் காட்சிக்காக ஒருநாள் முழுவதும் நூற்றுக்கணகானவர்களை வைத்து உழைத்தால் மட்டுமே அந்த ஒரு நிமிட காட்சி என்பது சிறப்பாக வரும்.   

அடுத்து இப்போதுள்ள சூழலில் பெரிய முதலீடுகளை போட்டு எடுக்கும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள். சிறு முதலீட்டு படங்களை திரையிட ஆர்வம் காட்டுவதில்லை. அது மிகுந்த வேதனைக்குரிய விஷயம். அந்த நிலை மாற வேண்டும். சிறுமுதலீட்டு படங்களையும் திரையிட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாக உள்ளது.   

என்னுடைய இந்த பிரபா படத்தை பொறுத்தவரை, கதாநாயகி  தனக்கு ஏற்படும் ஆபத்தில் இருந்து யாருடைய உதவியும் இல்லாமல் தன்னைத்தானே கடும் போராட்டத்திற்கு இடையே காத்துக்கொள்வதுதான் படமாக்கப்பட்டு டிசம்பர் 14ம் தேதி தமிழகமெங்கும் சிறப்பாக வெளியிடப்பட்டது. இந்தப்படம் பெண்களுக்கு ஒரு தைரியத்தையும், உத்வேகத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாது. 

தலைப்புச்செய்திகள்