Tuesday, 11th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூத்தாநல்லூரில் கொரோனா கட்டுப்பாட்டு உதவி மையம்: பெரிய பள்ளி வாசல் ஜமாத் ஏற்பாடு

ஏப்ரல் 17, 2020 10:43

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பெரிய பள்ளி வாசல் ஜமாத் சார்பில், கொரோனா கட்டுப்பாட்டு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து செயலாளர் ஜே.எம்.ஏ.ஷேக் அப்துல் காதர் கூறியதாவது: உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோயால் உலக மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கூத்தாநல்லூர் பகுதியில், பெரியப் பள்ளி வாசல் ஜமாஅத் சார்பில், பரக்கத்துல்லாஹ் மெஹர் நிஷா மகாலில், கொரோனா கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூர் பகுதி முழுவதும் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாடத் தடை விதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்குக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளவும்.
மற்ற பகுதியில் உள்ளவர்கள் தங்களுக்கு அத்தியாவசியமான தேவையான பொருட்களுக்கு வெளியில் வருவதை, தவிர்த்துக் கொண்டு கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளவும். நம் பகுதியில் கொரோனா தொற்று மேலும் பரவி விடாமல் இருக்க, அரசுக்கும், அதிகாரிகளுக்கும் அனைவரும் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். நம்முடைய பாதுகாப்புக்காகத்தான் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.

யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். நம்மூர் இளைஞர்கள் அவர்களது குடும்பத்தினரின் நலனையும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து, கொரோனா தொற்று கொடிய நோயை மேலும் பரவாமல் இருக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சிறுவர்கள் தெருக்களை விளையாட்டு மைதானமாக்கி, விளையாடுவதை நிறுத்தி விட்டு, வீட்டில் இருக்க வேண்டும்.

அத்தியாவசியமான தேவைகளுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 740 2777 507, 8678983862 என்ற எண்ணிலும், 24 மணி அவசரத் தேவைகளுக்கு   994252 0419,984236 3066,9698861810 மற்றும் 9842671558 உள்ளிட்ட எண்களைத் தொடர்பு கொள்ளவும். மருத்துவ உதவிகளுக்கும், வங்கிப் பணிகளுக்கும், வீட்டிற்குத் தேவையான அவசர உதவிகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளவும். 

இச்சேவைக்காக, 40 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 18 பேர் நகராட்சி சார்பில் பணியாற்ற அனுப்பப்பட்டுள்ளனர். அனைவருக்கும்  நகராட்சி சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு நல்கி, கொரோனாவை விரட்டுவோம்.
இவ்வாறு கூத்தாநல்லூர் பெரிய பள்ளி வாசல் ஜமாத் செயலாளர் ஜே.எம்.ஏ.ஷேக் அப்துல் காதர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்