Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காரைக்குடியில் திருநங்கைகளுக்கு நிவாரணம் வழங்கல்

ஏப்ரல் 21, 2020 01:30

காரைக்குடி: காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பில் நிவாரணம் வழங்கும் முகாம் செஞ்சை பள்ளிவாசல் பகுதியில் நடைபெற்றது.

முப்பது திருநங்கைககள் உள்பட நாற்பது குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான ஐம்பதாயிரம்  ரூபாய் மதிப்புள்ள அரிசி மளிகைப்பொருட்கள் மற்றும் காய்கறிகள் நிவாரணமாக வழங்கப்பட்டது. நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ஜெயமணி தன் சொந்தப் பணத்தில் இதனை வழங்கினார். நிவாரண முகாமில் கல்லூரி முதல்வர் கணேசன் கலந்து கொண்டார்.

தொடர்ந்து நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையில் பொதுமக்களிடம் சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், ஊரடங்கினை பின்பற்றுதல், கை கழுவி சுத்தம் செய்தல் போன்ற நிகழ்வுகளை
பின்பற்ற வேண்டும்  என மக்களிடம் எடுத்துரைத்தனர். முதியோர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

இதில், அழகப்பா பல்கலை நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன்,  நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் ஜெயமணி கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்