Saturday, 1st June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 107 போலீசார், 21 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா தொற்றால் அதிர்ச்சி

மே 09, 2020 02:21

சென்னை: தமிழகத்தில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த 128 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் 85 பேருக்கும், கோவையில் 7 போலீசாருக்கும், திருவள்ளூரில் 9 போலீசார், 3 தீயணைப்பு வீரர்களுக்கும், மதுரையில் 5 போலீசாருக்கும், ராமநாதபுரத்தில் 2 போலீசார் மற்றும் 3 தீயணைப்பு வீரர்களுக்கும், செங்கல்பட்டில் 4 போலீசாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது வரை 107 போலீசாருக்கும், 21 தீயணைப்பு வீரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்