Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லாக்-டவுனின் கடைசி வாரம்; மக்களுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும்: சிதம்பரம் வேதனை

மே 10, 2020 02:35

சென்னை: நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட லாக்டவுனின் கடைசி வாரம் தொடங்க உள்ள நிலையில் பொதுமக்களுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மே 17 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கின் கடைசி வாரம் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தொற்று பரவுகிறது, 3 சதவிகிதம் மரணமடைகிறார்கள், பொருளாதாரம் 100 சதவிகிதம் குலைந்து விட்டது. ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களும் சிறு, குறு தொழில்களும் சிதைந்து விட்டன. இச்சூழ்நிலையில் உங்களுக்கு நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும்?

நம்பிக்கையோடு இருங்கள், காலம் மாறும், காங்கிரஸ் கட்சி சொன்ன யோசனைகளை நாடும் அரசும் ஏற்றுக்கொள்ளும் விடியல் ஏற்படும். தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் கவனமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்