Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவிற்கு எதிராக மீண்டும் களமிறங்க துடிக்கும் சீனா: அமெரிக்கா எச்சரிக்கை

மார்ச் 13, 2019 12:33

வாஷிங்டன்: பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா ஐ.நா.வில் மேற்கொண்ட முயற்சியை சீனா பலமுறை தடுத்துவிட்டது. வீட்டோ அதிகாரம் கொண்டு சீனா தடுக்கிறது. புல்வாமா தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் பயங்கரவாத இயக்க பெயரை குறிப்பிடுவதில் சீனா தவறிவிட்டது. இப்போது மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சியை பிரான்ஸ் முன்னெடுக்கிறது. வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா மறுத்தால் கண்டிப்பாக இது தடையை ஏற்படுத்தும். 
 
"சீனா தொடர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளும், ஐநா பாதுகாப்பு கவுன்சில் 1267 குழுவின் ஆய்வில் பங்கு கொள்ளும்,” என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தீர்வு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என சீனா கூறியுள்ளது. இதுபோன்று கூறிதான் மூன்று முறை தடையை ஏற்படுத்தியது. இப்போதும் அதனையே கூறுகிறது. எனவே தடையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்றே பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே  சீனாவை மறைமுகமாக எச்சரிக்கும் செய்தியையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. “மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் ஏற்படும் தோல்வி பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு,” எதிரானதாக அமையும் என அமெரிக்கா எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைகள் அனைத்தும் மசூத் அசாருக்கு பொருந்தும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.

தலைப்புச்செய்திகள்