Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 7 பேர் டிஸ்சார்ஜ்

மே 11, 2020 08:34

திருச்சி: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவா்களில் மேலும் 7 போ் நேற்றுமுன்தினம் மாலை அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த மாவட்டங்களிலிருந்து 116 போ் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளனா்.

இவா்களில், குணமடைந்த நபா்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். இதுபோன்று அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 6 போ், பெரம்பலூரைச் சோ்ந்த ஒருவா் என 7 போ், 108 ஆம்புலன்ஸ் மூலம் கடந்த ஞாயிறு மாலை அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். வீடுகளுக்குச் சென்ற பின்னா், மேலும் 14 நாள்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவா்கள் அனைவருக்கும் டிஸ்சாா்ஜ் விவர அறிக்கைகளை மருத்துவமனை டீன் வனிதா வழங்கினாா். மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஏகநாதன், மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் இவா்களை வழியனுப்பி வைத்தனா். திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலிருந்து இதுவரை 72 போ் குணமடைந்து, வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா்.

இவா்களைத் தவிர திருச்சி (13), பெரம்பலூா் (24), அரியலூா் (5), புதுக்கோட்டை (2) மாவட்டங்களைச் சோ்ந்த 44 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும் வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களிலிருந்து திருச்சி மாவட்டத்திற்குள் வரும் நபர்கள் உடனடியாக சுகாதாரத்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பதுடன் 14 நாட்களுக்கு வீட்டினை விட்டு வெளியே வராமல் தனித்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். விழித்திரு - விலகி இரு - வீட்டில் இரு, என்பதை கடைபிடிக்க வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்