Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவுக்கு ரேபிட் டெஸ்ட் கிட் தயார்: ரூ.500 செலவில் இந்திய நிறுவனம் அசத்தல்

மே 11, 2020 03:09

கொல்கத்தா: கொல்கத்தாவின், சவுத் 24 பர்கானாஸைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ஜி.சி.சி. பயோடெக் இந்தியா, கொரோனா நோய் பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கிட்டை கண்டுபிடித்து அசத்தியுள்ளது. ஒரு முறை பரிசோதனை செய்ய இந்த கிட் மூலம், ரூ .500 மட்டுமே செலவாகும். 

ஜி.சி.சி பயோடெக் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ராஜா மஜும்தார் தெரிவித்துள்ளதாவது:
ஆய்வு மற்றும் தயாரிப்பு பிரிவை சேர்ந்த எங்கள் ஊழியர்கள், 2 மாதங்கள் ஆய்வு செய்து இந்த கிட் தயாரித்துள்ளார்கள். இதில் உள்ள அனைத்து கருவிகளும் எங்கள் சொந்த தயாரிப்பு. எனவே, இது செலவு குறைந்ததாகும் நாங்கள் 1 கோடி சோதனை கருவிகளை உருவாக்கியுள்ளோம். இந்தியா ஒரு நாளைக்கு 3 லட்சம் சோதனைகளை செய்தாலும் கூட, நாங்கள் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் அரசுக்கு சப்ளை செய்ய முடியும்.

இந்த உள்நாட்டு சோதனை கருவியில் இரண்டு படிகள் உள்ளன - QRT PCR மாஸ்டர் மிக்ஸ் ப்ரைமர் ஆய்வு மற்றும் RNA Template ஆகியவை ஒவ்வொன்றும் ஆய்வகத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இது ஒரு ரேபிட் சோதனைக் கருவியாகும், 90 நிமிடங்களுக்குள் கொரோனா நோயாளியிடம் பரிசோதித்து பார்த்து ரிசல்ட் கூற முடியும். மாதத்திற்கு 1 கோடி சோதனை கருவிகளை உற்பத்தி செய்யும் திறன் எங்களிடம் உள்ளது.

மேலும், ஐ.சி.எம்.ஆர். இந்த கருவிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இவ்வாறு ராஜா மஜும்தார் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்த, ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவுகளை காட்டியதால், திருப்பியனுப்பப்பட்டன. இந்நிலையில், உள்நாட்டு நிறுவனம், இதுபோன்ற பரிசோதனை கருவியை தயாரித்து சப்ளை செய்ய முன்வந்துள்ளது மருத்துவத்துறைக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்