Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

மே 12, 2020 05:50

சென்னை: தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட காலம் மக்கள் சேவையாற்ற இறைவன் ஆசிர்வதிக்கட்டும்.

இவ்வாறு பிரதமர் பதிவிட்டுள்ளார்.

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தி:

தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இறைவனின் அருளோடு உடல் ஆரோக்கியத்தோடு , நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்