Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்து மதத்திற்கு எதிராக பேசும் நடிகர், நடிகைகளை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா அறிவிப்பு

மே 12, 2020 06:22

காரைக்குடி: நடிகர்- நடிகைகள் இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். ஊரடங்கு முடிந்ததும் இவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச் ராஜா கூறியுள்ளார்.

பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா சிவ கங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் 13 லட்சம் பேர் கெரோனாவால் பாதிக்கப்பட்டு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைதான் முக்கிய காரணமாகும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அன்னிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு வரும். வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு பாக்கி வைத்துள்ள மல்லையாவின் 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியுள்ளோம்.

நடிகர்கள் கமல், விஜய் சேதுபதி, நடிகை ஜோதிகா போன்றோர் இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். ஊரடங்கு முடிந்ததும் இவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்