Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் வழங்க முன்வந்த ரூ.1 கோடியை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

மே 12, 2020 06:55

சென்னை: கொரோனா தடுப்பு பணிக்கு காங்கிரஸ் அளிக்க முன்வந்த ரூ.1 கோடியை ஏற்க தமிழக அரசு மறுத்து விட்டதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் நேற்று காணொலி காட்சி வழியாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 கொரோனா தடுப்பு பணிக்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவின்பேரில் தமிழக காங்கிரஸ் கட்சி ரூ.1 கோடியை தமிழக அரசுக்கு தர முன்வந்தது. இதுகுறித்து அரசின் தலைமை செயலாளருக்கும் கடிதம் எழுதினோம். ஆனால் இத்தொகை தேவையில்லை என்றும், மாநில அரசிடம் போதிய நிதி உள்ளது எனவும் பதில் வந்தது. இது எங்களுக்கு மிகவும் வருத்தம் அளித்தது. எங்கள் பணம் நல்ல பணம். காமராஜர் உழைப்பால் காங்கிரசுக்கு அமைந்த கட்டிடங்களில் இருந்து வரக்கூடிய வாடகை பணம். இன்னும் சொல்லப்போனால் அது காமராஜரின் உதிரம் போன்றது. இதனை அரசு மறுத்தது தவறு.

இவ்வாறு அவர் கூறினார்.

‘மதுக்கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வருவதை மறந்துவிட வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து கே.எஸ்.அழகிரி கூறுகையில், ‘நிச்சயமாக அவரது கருத்தை வரவேற்கிறேன். ஏனெனில் இது மோசமான காலகட்டம். இந்த சூழ்நிலையில் மதுக்கடைகள் திறப்பு என்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். ரஜினிகாந்த் கூறியது சரியே’ என்று தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்