Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆலயங்களை தரிசனத்துக்கு திறக்க வேண்டும்: பா.ஜ., வலியுறுத்தல்

மே 12, 2020 10:51

சென்னை: “தமிழகம் முழுவதும் ஆலயங்களை தரிசனத்துக்காக திறக்க வேண்டும். மேலும், இறை தரிசனம் மக்களுக்கு அச்சத்தை நீக்கி ஒரு வித நிம்மதியை அளிக்கும்,” என, தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கை தளர்த்தி இயல்பு வாழ்க்கைக்கும், பொருளாதார நடவடிக்கைகளுக்கும் வழிவகை செய்திருப்பது வரவேற்க வேண்டியது. மக்கள் பொருளாதார தேக்கத்தில் இருந்து மீள்வதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற அச்சங்களில் இருந்தும் மீளவேண்டும். மன நிம்மதி பெற வேண்டும். ஊரடங்கு காலம் பலருக்கு மனச்சோர்வையும், ஒரு வித அச்சத்தையும் உருவாகியுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் ஆலயங்களை விரைந்து திறப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆலயங்களை நம்பி தேங்காய் பழத்தட்டு விற்பவர்கள், பிரசாத கடைக்காரர்கள், பூக்கடைக்காரர்கள், பக்தி இசைத்தட்டு விற்பனையாளர்கள், புகைப்படக்காரர்கள் என பரும் உள்ளனர். ஆலயங்களை திறப்பதன் மூலம் அங்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடக்கும் தினசரி வேள்விகள் தொற்றுக்கு மருந்தாக விளங்கக்கூடும். தரிசனம் செய்ய வருபவர்களை சமூக விலகலை கடைபிடித்து ஒருவர் பின் ஒருவராக கூட அனுப்பலாம். பக்தர்கள் நலம், ஆலயங்கள் சார்ந்த ஊழியர்கள் நலன், ஆலயம் சார்ந்த வியாபாரிகள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஆலயங்களை விரைந்து திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்