Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மருத்துவமனையிலிருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டிஸ்சார்ஜ்

மே 12, 2020 10:54

புதுடெல்லி: டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) கடந்த ஞாயிறு இரவு நெஞ்சு வலிக்காக அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங்கிற்கு, கடந்த ஞாயிறு இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக, அவர் இரவு 8.45 மணியளவில் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கார்டியோ-தொராசி வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஒரு புதிய மருந்து காரணமாக, மன்மோகன்சிங்கிற்கு பக்க விளைவாக நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்பட்டது. 87 வயதான மன்மோகன்சிங்கிற்கு, இருதயவியல் பேராசிரியர் டாக்டர் நிதீஷ் நாயக் சிகிச்சை அளித்ததாக செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவித்தது.

இந்நிலையில்தான், உடல்நலம் தேறிய மன்மோகன்சிங், நேற்று மதியம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். அவர் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஓய்வு எடுக்க டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக தலைவர்கள் பலரும், மன்மோகன் சிங் உடல்நிலை தேற வேண்டும் என வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருந்தனர். "உடல்நிலை குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டவர் டாக்டர் மன்மோகன் சிங், அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன். இந்தியா முழுவதும் நமது முன்னாள் பிரதமருக்காக பிரார்த்தனை செய்கிறது," என்று புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் ட்வீட்டில், "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் கவலைப்படுகிறேன். அவர் விரைவாக குணமடைய விரும்புகிறேன் மற்றும் அவரது நல்ல ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்தனை செய்கிறேன்," என்று கூறினார்.

தலைப்புச்செய்திகள்