Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்கனும்: சுஷ்மா சுவராஜ்

மார்ச் 14, 2019 05:29

புதுடில்லி : பாக்., பிரதமர் இம்ரான் கான் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறவர் என்றால் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவன் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்கட்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 

டில்லியில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய சுஷ்மா, பாக்.,ஐ பயங்கரவாத அமைப்புக்கள் இல்லாத நாடாக மாற்றினால் அந்நாட்டுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தவும், சுமூகமான சூழலை உருவாக்கிக் கொள்ளவும் நாங்கள் தயாராக உள்ளோம். பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும் பாக்., இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். ஆனால், பயங்கரவாத அமைப்புக்கள் மீது பாக்., நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாக்., உடன் பேச்சுவார்த்தை என்பது சாத்தியமாகும். 

சிலர் சொல்கிறார்கள், இம்ரான்கான் பெருந்தன்மையானவர், அமைதியை விரும்புகிறவர் என்று. உண்மையிலேயே அவர் அமைதியை விரும்புகிறவராக இருந்தால் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்கட்டும். அவர் எவ்வளவு பெருந்தன்மையானவர் என்பது இதில் தெரிந்து விடும் என்றார்.

தலைப்புச்செய்திகள்