Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாக்காளர்களின் விரல்களில் வைக்க 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயார்

மார்ச் 14, 2019 05:50

மைசூரு: வாக்காளர்களின் விரல்களில் வைக்க 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயார் பாராளுமன்ற தேர்தலில் முதல்கட்டம் மற்றும் 2-ம் கட்ட தேர்தலுக்கு தேவையான 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஜுரம் தொற்றிக்கொண்டுள்ளது. கட்சிகள் கூட்டணி, தொண்டர்கள் ஆரவாரம், தலைவர்கள் பிரசாரம், ஆட்டோக்களில் பிரசாரம், கட்சிகளின் பொதுக்கூட்டம் என நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. இந்த நிலையில் தேர்தலின்போது ஓட்டுப்பதிவு அன்று வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை வைக்கப்படுவது வழக்கம். இது காலம்காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. 

இந்த அழியாத மை தயாரிக்கும் அரசு தொழிற்சாலை கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ளது. நாடு முழுவதும் 543 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுதேர்தலுக்காக 10 மில்லி லிட்டர் அளவில் 26 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்க இந்த நிறுவனத்துக்கு கடந்த ஜனவரி மாதம் தேர்தல் கமிஷனிடம் இருந்து உத்தரவு வந்தது. உடனடியாக அழியாத மை தயாரிக்கும் பணிகள் தொடங்கின. 

இதற்காக இதுவரை ரூ.66 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டம் மற்றும் 2-ம் கட்ட தேர்தலுக்கு தேவையான 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   
 

தலைப்புச்செய்திகள்