Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா இயற்கையான வைரஸ் அல்ல: ஆய்வகத்திலிருந்து பரவியது: நிதின் கட்கரி

மே 14, 2020 05:05

புது டெல்லி: “கொரோனா வைரஸ் உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த வைரஸ் இயற்கையானது அல்ல என்றும் ஆய்வகத்தில் இருந்து பரப்பப்பட்டுள்ளது,” என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து  மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

கொரோனா வைரஸ் உடன் வாழும் கலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு இயற்கை வைரஸ் அல்ல. இது ஒரு செயற்கை முறையில் ஆய்வகத்தில் இருந்து பரப்பப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் பாதித்துள்ளது. இப்போது உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்காக ஆராய்ச்சி செய்கிறார்கள். இதுவரை தடுப்பு மருந்து கிடைக்கவில்லை. விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். அதன் பின்னர் எந்த பிரச்சனையும் இருக்காது.

இதில் அடுத்த பிரச்னை என்னவென்றால் கொரோனா வைரஸ் ஒருவரை பாதித்திருக்கிறதா?, இல்லையா? என்பதை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. சிலருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதிக்கிறது. எனவே, கொரோனா பாதிப்பை கண்டறியும் எளிய வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் இது இயற்கை வரைஸ் அல்ல. ஆய்வகத்திலிருந்து பரப்பப்பட்டது. இதனை உலகமும், இந்தியாவும் எதிர்கொள்வதற்கு தயாராகி விட்டன. அறிவியலாளர்களும் தயாராகியுள்ளார்கள். இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்