Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியிலிருந்து சரக்கு விமானப் போக்குவரத்து தொடக்கம்

மே 14, 2020 05:31

திருச்சி: பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில்இ திருச்சியிலிருந்து சரக்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்தும்இ திருச்சி வழியாகவும் சரக்கு விமானப் போக்குவரத்தைத் தொடங்க ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளது.
அந்த வகையில்இ கடந்த 8-ம் தேதி திருச்சி -சென்னை வழியாக சிங்கப்பூருக்கு சரக்கு விமானம் இயக்கப்பட்டது.

உணவு மற்றும் மருந்துப்பொருள்களுக்கு முக்கியத்துவம் அளித்துஇ இயக்கப்பட்ட இந்த சரக்குப் போக்குவரத்துக்கு வரவேற்பு அதிகரித்ததை அடுத்துஇ மே 12 -ம் தேதி முதல் தொடா் சரக்கு விமானப் போக்குவரத்தை அந்நிறுவனம் தொடங்கி 6 நாள்கள் இயக்க முடிவு செய்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து முதல் மற்றும் 2- ம் தர நகரங்களை இணைக்கும் வகையில் இந்த சரக்குப் போக்குவரத்து நடைபெறுகின்றது.

செவ்வாய்க்கிழமை இரவு 11. 40 மணிக்கு திருச்சி வந்த விமானம் பொருள்களை இறக்கிஇ ஏற்றிக்கொண்டுஇ புதன்கிழமை இரவு 11 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இதில் 8 டன் பொருட்கள் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளன.

இதுபோலஇ புதன்கிழமை மாலை 5.50 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து வந்த விமானம்இ பொருள்களை இறக்கிஇ ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை புறப்படவுள்ளது. இதில் காய்கனிகள்இ மலா்கள்இ மற்றும் உணவுப்பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் விமானம்: வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 64 விமானங்கள் மூலம் அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மலேசியாவிலிருந்து 2 இ சிங்கப்பூரிலிருந்து 2இ அரபு நாடுகளிலிருந்து 1 என மொத்தம் 5 விமானங்களில் பயணிகள் திருச்சி அழைத்து வரப்படுகின்றனா். மே 21 ம் தேதி பகல் 1 மணிக்கு திருச்சியிலிருந்து செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்இ இரவு 11.40 மணிக்கு மலேசியாவிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி வருகிறது என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தலைப்புச்செய்திகள்