Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒருநாள் நிச்சயம் விடியும்: அது உன்னால் மட்டுமே முடியும்

மே 14, 2020 05:46

வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கையை புரட்டிப்பார்த்தால் வெற்றிக்கு முதல் மூலதனமாக இருப்பது தன்னம்பிக்கை ஆகும். தன்னம்பிக்கை உடையவன்  எதிலும் எளிதாக வெற்றி அடையமுடியும்.இமாலய சாதனைகளை கூட அவர்களால் வெல்லமுடியும். வாழ்க்கையில் எந்த ஒருநிலையிலும், எந்த ஒரு வயதிலும் வெற்றி பெற வேண்டும் என்றால் கடுமையான உழைப்பும் வெற்றி பெற்று விடுவோம் என்ற அபாரமான தன்னம்பிக்கையும் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்.

எந்த ஓர் செயலை செய்ய தொடங்கும் போதே முடியாது, சரியாக வராது என்று எண்ணினால் எப்போதும் நாம் வெற்றி இலக்கை எட்டவே முடியாது. மாணவ  பருவத்தில் விளையாட்டு, படிப்பு போன்றவைகளில் எதை தேர்ந்து எடுத்தாலும் அதில் வெற்றி பெற்று விடலாம், சாதிக்க முடியும் என்று நம்பிக்கைய முதலில்  வளர்த்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் அந்த நிலைகளில் நாம் வெற்றியை சுலபமாக எட்டமுடியும்.

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், வாழும் காலத்தில் நமது பெயர் சொல்லும்படி வாழ்ந்து காட்ட வேண்டும் என்பது ஒவ்வொரு சராசரி  மனிதனின் ஆசைதான். இந்த ஆசைக்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லை. அதே நேரத்தில் வாழ்க்கையின் உயரத்தை நோக்கி  பயணம் செய்யத்  தொடங்கியவர்களுக்கு  வழித்துணை ஊன்றுகோலாக ஏதாவது ஒன்று நிச்சயம் தொடர்ந்து கொண்டே இருக்கும். 

இளைஞர்கள் பொது அறிவால் தங்களைத் தாங்களே நல்ல முறையில் பண்படுத்திக் கொள்ள வேண்டும். விவேகமும் வைராக்கியமும் மனிதனை அவன்  லட்சியத்திற்கு அழைத்துச் செல்லும். நல்ல முடிவுகளை எடுப்பது விவேகம். எடுத்த முடிவுகளை நிறைவேற்றிக் கொள்ள தேவைப்படுவது வைராக்கியம். இந்த  வைராக்கியத்தோடு வாழ்பவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்கிறார்கள். 

அதே நேரத்தில் இந்த வைராக்கியத்தோடு, உழைப்பு, நேர்மை, விடாமுயற்சி  ஆகியவை வாழ்க்கையின் உயரத்துக்கு ஒருவரை அழைத்து சென்றாலும்,  அவரை பின்னணியில் இருந்து இயக்குவது எதாவது ஒரு உந்து சக்தியாக இருக்கும். அந்த சக்தி  தாய், தந்தை, உறவினர் என யாராக வேண்டும £னாலும் இருக்கலாம்.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.  - கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.

இப்படி கைமாறு கருதாமல் பொதுநல சேவை செய்ய வேண்டும் என்று எண்ணி வாழ்பவர்களுக்கு பல்வேறு இன்னல்கள் வரத்தான் செய்யும். ஆனால்  அதை முறியடித்து முன்னேறி செல்லத்தான் வேண்டும். அப்படி முன்னேறி செல்பவர்களில் ஒருவராக திகழ்பவர்தான் டாக்டர் ராஜா. அறம் மக்கள்  நலசங்கத்தின் தலைவராக இருந்து தன்னால் முடிந்த சமூக சேவைகளை செய்து வருகிறார். 

அதாவது வாழ்வில் உயர நினைப்பவர்களுக்கு ஒரு ஊன்று கோலாக அறம் மக்கள் நலச்சங்கத்தை உயர்த்தி வருகிறார்கள் இருவரும். நாம் அனைவரும் ஒரே  குடும்பம் என்றவாறு நமது கடமைகளை செய்ய வேண்டும். மனித நேயத்தினை அடிப்படையாகக் கொண்டு சேவையினை வழங்கவேண்டும். முடியாது  என்கிற வார்த்தையே இருக்க கூடாது. முயற்சிதான் திருவினையாக்கும். மொத்தத்தில் மக்களிடையே மகிழ்ச்சி நிறைந்த  தலைமையினை வகிக்க க்கூடிய, பெருமைப்படக்கூடிய தேசமொன்றைக் உருவாக்க வேண்டும். அதற்கு நம்மால் முடிந்த சேவைகளை மக்களுக்கு செய்ய  வேண்டும் என்பதே  அறம் மக்கள் நலச் சங்கத்தின் குறிக்கோளாக உள்ளது. 

அறம் மக்கள் நலச்சங்கத்தில் தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களோடு இணைந்து தமிழகம்  முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது இந்த சங்கம் என்றால் அது மிகையாகாது. சுயதொழில் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை  பெற தேவையான வழிமுறைகளை செய்து கொடுக்கிறது அறம் மக்கள் நலசங்கம். அதன்மூலம் வரும் வருவாயில் தங்களால் இயன்றதை இல்லாதவர்களுக்கு  செய்து வருகிறார்கள் அச்சங்கத்தினர்.

குறிப்பாக படிக்க வசதியில்லாத ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, ஆதரவற்றோருக்கான உதவிகள், வேலை வ £ய்ப்பற்றவர்களுக்கு சுயதொழில் செய்வதற்கான வழிகாட்டுதல்கள், அரசு பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள், அரசு மருத்துவமனைக்கு பெட்,  கட்டில்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். அறம் அனைவருக்கும் சேவை செய்யக்கூடிய ஒரு உன்னத அமைப்பு என்பதை அதன் சேவைகளை  வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

மனித வாழ்வு அமைதியும், இன்பமுமாக அமைய வேண்டுமானால் வாழ்வு அற வாழ்வாக மலர வேண்டும் என்பதை தெளிவாக  உணர்த்தி லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை வளமாக்கி வரும் ராஜா என்கிற அழகர்சாமியின் செயல்பாடுகளை இன்று பார்த்து வியக்காதவர்களே இல்லை  என்றுதான் கூற வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் வாழ சமுத்திரத்தை பூர்வீகமாக கொண்ட ராஜா தனது சிறு வயதில் இருதே சமூக அக்கறையுடன் வளர்ந்தவர்.  

அவரது தந்தை கால்நடை பராமரிப்புத் துறையில் பணிபுரிந்தாலும், அன்னுடைய எண்ணங்கள் முழுவதும் பொதுநலம் சார்ந்ததாகவே இருந்தது. பத்தாம் வகுப்பில் படித்து வந்தபோது, படிப்பு மட்டுமே தன்னுடைய குறிக்கோள்களை நிறைவேற்றாது என்று எண்ணியவர் அப்போதே முழு நேர சமூக  செயற்பாட்டளாராக மாறினார். அதை யடுத்து சிறு சிறு சுயதொழில்களை செய்ய ஆரம்பித்தார்.  தன்னை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும்  நன்கு ஆராய்ந்து அதற்கான காரணங்களை அலசி ஆராய ஆரம்பித்தார். 

ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும், அதற்கு தன்னிடம் உள்ள பொருளாதாரம் போதாது என்பதை உணர ஆரம்பித்தார்.  அதையடுத்து அக்கறை கொண்டவர்களிடம் தனது பழக்க வழக்கத்தை ஏற்படுத்தினார். அவர்களுக்கு சேவை மனபான்மையை தூண்ட ஆரம்பித்தார். அதன் விளைவாக ராஜாவிற்கு பொருளாதார ரீதியாக பலரின் உதவிகளும் கிடைக்க ஆரம்பித்தது. தன்னிடம் உள்ள பொருளாதாரம்,  

சமூக பண்பாளர்கள் கொடுத்த பொருளாதார உதவி என அனைத்தும் சேர்த்து தன்னாலன அனைத்து உதவிகளையும் செய்ய ஆரம்பித்தார். சுமார் 15 ஆண்டுகளாக தொடர்ந்து சமூக சேவை செய்து வரும் ராஜாவின் செயல்பாடுகள் பட்டியலிட முடியாதவை என்றுதான் சொல்ல வேண்டும்.  2012 ஆண்டு சுமார் 26 பேருக்கு இருதய ஆபரேசனுக்கான உதவி செய்து அவர்களின் வாழ்வை வளமாக்கினார். 

அதோடு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டவளுக்கான உதவிகள், கண் தானம் பெறுவதற்கான உதவிகள் என மருத்துவ ரீதியிலான பல விஷயங்களை செய்து  கொடுத்துள்ளார்.தனிப்பட்ட ஒருவராக இருந்து செயல்ப டுவதைவிட அதை ஒரு சங்கமாக இருந்து உருவாக்கி மக்களை சங்கமிக்க வைத்தால் உதவி  வேண்டியோருக்கு எளிதில் உதவிகளை கிடைக்க செய்யலாம் என்று எண்ணினார். 

அதன் வெளிபாடுதான் அறம் மக்கள் நலச் சங்கம். அறம் மக்கள் நலசங்கத்தின் செயல்பாடுகள் இன்று மாநிலம் விட்டு மாநிலம் மட்டுமல்லாது அயல்  நாடுகளிலும் தன் சேவையை செய்கிறது என்று பிரமிக்க வைக்கிறது. படிக்க வசதியில்லாத ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை,  ஆதரவற்றோருக்கான உதவிகள், வேலை வாய்ப்பற்றவர்களுக்கு சுயதொழில் செய்வதற்கான வழிகாட்டுதல்கள், அரசு பள்ளிகளுக்கு தேவையான  உபகரணங்கள், அரசு மருத்துவமனைக்கு பெட், கட்டில்கள் என சொல்லிக் கொண்டே போகலாம் இவர்களின் சேவையை.

தற்போது உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவை பொறுத்தவரை பிரதமர் மோடியும், தமிழகத்தில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனாவின் கோர பிடியில் இருந்து மக்களை காக்க அயராது பாடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ்  தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழக மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவி அளிக்க வேண்டும் என, தமிழக  முதல்வர் எடப்பாடி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதையடுத்து  அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில், சங்கத்தின் தலைவர் டாக்டர் சு.ராஜா,  பொதுச்செயலாளரும் மக்கள் ராஜ்யம் இதழின் ஆசிரியருமான எஸ்.ரமேஷ்குமார் ஆகியோர் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர்  சு.சிவராசுவிடம் வழங்கினர். 

தமிழகத்தில் ஊரடங்கு தொடங்கிய நாள் பொதுமக்களுக்கு அரிசு மூட்டைகள், மளிகை பொருட்கள், முககவசங்கள், உணவுகள் என பலதரப்பட்ட உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது அறம் மக்கள் நலச்சங்கம். பசிப்பிணியை நீக்கி, தழைத்தோங்கி வரும் அறம் மக்கள் நலச்சங்கத்தை உருவாக்கி அதன் தலைவராக செயல்பட்டு வரும் சு.ராஜா என்கிற அழகர்சாமி தன்னுடைய 47வது பிறந்த நாளை மே 15ம் தேதி கொண்டாடுகிறார்.

ஒருநாள் நிச்சயம் விடியும்
அது உன்னால் மட்டுமே முடியும்...  என்று கூறி, தன்னை நம்பி வாழும் பலதரப்பட்ட மக்களின் வாழ்வை வளமாக்கி, தானும் வாழ்ந்து, பிறரையும் வாழ வைத்துவரும் ராஜா பல்லாண்டு வாழ்ந்து இன்று போல் என்றும் லட்சக்கணக்கானவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் வாழ்த்துகிறோம்.

- சு.ரமேஷ்குமார், ஆசிரியர், மக்கள் ராஜ்யம்

தலைப்புச்செய்திகள்