Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய அரசின் திட்டங்கள் நம்பிக்கை இழந்து விட்டன: பிரியங்கா

மே 15, 2020 05:07

புதுடெல்லி: பொருளாதார மீட்பு குறித்த மத்திய அரசின் திட்டங்கள் நம்பிக்கை இழந்து விட்டன என காங்.,, பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக ரூ.20 லட்சம் கோடியில் பொருளாதார மீட்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று (மே 14) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த 2ம் கட்ட திட்டங்களில், ஊரடங்கால் கடுமையாக வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மேலும், சாலையோர வியாபாரிகள், விவசாயிகள், சிறு தொழில் புரிவோருக்கு சம்பளம், கடன், சலுகைகள் கிடைக்கும் வகையிலும் பல்வேறு அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இந்நிலையில், காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார் அதில், உ.பி.,யில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், நடந்து சோர்வடைந்த தனது குழந்தையை பெட்டியில் வைத்து இழுத்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதனை பகிர்ந்து அவர் பதிவிட்டுள்ளதாவது: சோர்ந்து போன பாதங்களால் யாருடைய எதிர்காலம் வரையப்படுகிறது? பேரழிவு காலங்களில் இந்த இந்தியர்களைக் கூட வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியாவிட்டால் எப்படி? உங்கள் பேச்சுக்கள், திட்டங்கள் எல்லாம் நம்பிக்கை இழந்துவிட்டன. இந்த நடைகள் தங்கள் கிராமத்தை அடைந்தபின்பே நிறுத்தப்படும். அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்