Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்து மத சம்பிரதாயங்களை அவமதித்த குற்றச்சாட்டு: ரஹானா பாத்திமாவுக்கு பி.எஸ்.என்.எல். கட்டாய ஓய்வு

மே 15, 2020 05:33

புதுடில்லி: சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்று சர்ச்சை ஏற்படுத்திய ரஹானா பாத்திமாவுக்கு கட்டாய ஓய்வு அளித்து பி.எஸ்.என்.எல்.உத்தரவிட்டது.

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தின. இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோரில் அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் இரண்டு இளம் பெண்கள் அதிரடிப்படை சீருடை அணிந்து வந்தது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. ஒருவர் கவிதா ஜக்கால்,25, மற்றொரு பெண் கேரளாவைச் சேர்ந்த ரஹானா பாத்திமா, 29 இவரும் ஹெல்மெட் அணிந்து சபரிமலைக்கு வந்தனர். ஆனால் பலத்த எதிர்ப்பு காரணமாக கோயிலுக்குள் நுழைய முடியவில்லை.

இளம்பெண்கள் இருவர் கோயிலுக்குள் நுழைய தூண்டிவிட்டது கேரள போலீசார் தான் எனவும் பலத்த குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் கோயி்லுக்குள் நுழைய முயன்று பரபரப்பை ஏற்படுத்திய ரஹானா பாத்திமா பி.எஸ்.என்.எல்லில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். சபரிமலை விவகாரத்தில் அவர் ஹிந்து மத சம்பிரதாயங்களை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று அவருக்கு கட்டாய ஓய்வு அளித்து உத்தரவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்