Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அறம் மக்கள் நலச்சங்க தலைவர் டாக்டர் சு.ராஜாவிற்கு இன்று பிறந்தநாள்: 2 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

மே 15, 2020 05:38

திருச்சி, மே.15: அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் டாக்டர் சு.ராஜாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், பல்சுவை போட்டிகள் நடத்தப்படுகிறது.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது அறம் மக்கள் நலச்சங்கம். லட்சக்கணக்கான மக்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தச் சங்கம் மக்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதோடு, தமிழகம் முழுவதும், ஏழை, âOò ñ£íõ˜èÀ‚° è™M àîMˆ ªî£¬è, ÝîóõŸ«ø£¼‚è£ù àîMèœ, மேலும் பேரிடர் காலங்களில் மக்களுக்கு தேவையான உதவிகள் அதாவது மழை, வெள்ளம் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பால ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காலக் கட்டங்களிலும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது அறம் மக்கள் நலச்சங்கம். 

இந்த சங்கத்தின் தலைவராக டாக்டர் சு.ராஜாவும், பொதுச்செயலாளராக மக்கள் ராஜ்யம் இதழின் ஆசிரியர் சு.ரமேஷ்குமாரும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தலைவர் சு.ராஜாவின் பிறந்தநாள் மற்றும் அறம் மக்கள் நலச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாஇன்று கொண்டாடப்படுகிறது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் தற்போது நாடு தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பிறந்தநாளையொட்டி இணையதளம் வாயிலாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பாடலாசிரியர் பா.விஜய் - கவிஞர் தங்க மூர்த்தி நடுவர்களாக இருந்து கவிதைப்போட்டிகள், இயக்குனர் சற்குணம் - நடிகர் தம்பி ராமையா நடுவர்களாக இருந்து குறும்படம், மதுரை முத்து - ஈரோடு மகேஷ் நடுவர்களாக இருந்து பேச்சு போட்டியை நடத்துகிறார்கள். 

மேலும் பாடலாசிரியர் பா.விஜய் - செந்தில்கணேஷ், இராஜலட்சுமி நடுவர்களாக இருந்து பாட்டு போட்டி, இயக்குனர் சற்குணம் - நடிகர் பவர்ஸ்டார் நடுவர்களாக இருந்து நடனப்போட்டி, ஈரோடு மகேஷ் - கவிஞர் தங்கம் மூர்த்தி நடுவர்களாக இருந்து கட்டுரை போட்டி, அறந்தாங்கி நிஷா - கவிஞர் கவிசெல்வா நடுவர்களாக இருந்து கோலப்போட்டியை நடத்துகிறார்கள். அதோடு மதுரை முத்து - அறந்தாங்கி நிஷா நடுவர்களாக இருந்து பலகுரல் போட்டி, நடிகர் தம்பி ராமையா - ஊடகவியலாளர் ஸ்ரீதர் நாராயணன் நடுவர்களாக இருந்து ஓவியப்போட்டியை நடத்துகிறார்கள். 

இந்த போட்டிகள் இன்று மாலை வரை (15.5.2020) நடத்தப்படுகிறது. போட்டியில் வெற்றிப் பெற்றவர்களை தேர்வு செய்து அதற்கான பரிசுகள் அடுத்த சில நாட்களில் வழங்கப்படவுள்ளது. டாக்டர் சு.ராஜா தனது பிறந்தநாளான இன்று அறம் தொலைகாட்சியில் நேரலையில் பேசுகிறார். அறம் மக்கள் சங்கத்தின் சில முக்கிய நிர்வாகிகள், அறம் தொலைகாட்சியினர் தனது அலுவலகத்திலேயே சமூக இடைவெளியோடு பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்