Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மே 18 முதல் அரசு ஊழியர்கள் வேலைக்கு வர வேண்டும்: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

மே 15, 2020 12:48

சென்னை: “மே 18-ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத அரசு ஊழியர்களுடன் வாரத்தின் 6 நாட்களும் இயங்கும்,” என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரி கட்ட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால்தான் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 2020 முதல் ஜூலை 2021 வரையிலான அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல, தமிழகத்திலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை தற்காலிகமாக நிறுத்திவைத்து அரசாணை வெளியிடப்பட்டது.

மேலும், கொரோனா தொற்று காரணமாக அரசு அலுவலகங்கள் அனைத்தும் முழுப் பணியாளர்களுடன் செயல்படாமலும் இருந்தது. தற்போது, மே 18-ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் வாரத்தின் ஆறு நாட்களும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வருகின்ற 18ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும். அரசு அலுவலகங்களில் ஊழியர்களை 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். அலுவலகம் பணிக்கு வராத ஊழியர்கள் மின்னணு முறையில் தொடர்பில் இருக்க வேண்டும். அலுவலர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்றும் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்