Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்

மே 16, 2020 12:32

புதுடெல்லி: உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், அதன் இறக்குமதி குறைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவு எட்டும் வகையல் மேக்இன் இந்தியா பயன்படுத்தப்படும். வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு உதிரிபாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும். சில ராணுவ தளவாடங்களை உள்நாட்டில் மட்டும் உற்பத்தி வகையில், அதன் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும்.பாதுகாப்பு உபகரணங்கள் உள்நாட்டில் கொள்முதல் செய்ய புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும். ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் நிறுவனங்களாக மாற்றப்படும்.ராணுவ தளவாடங்கள் இறக்குமதி மசோதா விரைவில் அறிமுகபடுத்தப்படும். பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் அன்னிய முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்