Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

8 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்: நிதி அமைச்சர் அறிவிப்பு

மே 16, 2020 12:38

புதுடெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: இந்திய வான்பரப்பை விமான நிலையங்கள் பயன்படுத்துவதில் இருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், விமான நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்.சீர்திருத்தங்கள் மூலம் விமானங்கள் இயக்குவதற்கான செலவை ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்திய வான்பரப்பை விமானங்கள் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

வான்பரப்பை தாராளமாக பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் விமானங்களுக்கு பயண நேரம், எரிபொருள் மிச்சமாகும். மேலும் 6 விமான நிலையங்களில் தனியார் முதலீடு அனுமதிக்கப்படும். விமானங்களை பராமரிக்கும் தளங்களை இந்தியாவிலேயே அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய வான்வெளி விமான பாதைகள் தொடர்பாக திருத்தங்கள் கொண்டு வரப்படும். விமானநிலையங்களை தரம் உயர்த்துவதற்கான பணிகள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செய்யப்படும்.

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். செயற்கைகாள் ஏவுதல், தயாரிப்பு உள்ளிட்டவற்றில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும். விண்வெளி ஆய்வு மற்றும் பயணம் ஆகியவற்றை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளலாம். இஸ்ரோ அமைப்பின் உள்கட்டமைப்பு வசதிகளைதனியார் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

8 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். இதன் மூலம் மின்சார விநியோகம் மேம்படுவதுடன் அதன் தரம் உயரும். மின்பகிர்மான நிறுவனங்களுக்கான புதிய வரி விதிப்பு முறைகள் அறிமுகம் செய்யப்படும்.

உணவு பதப்படுத்தும் துறையில் பயன்படுத்தப்படும் கதரியக்க ஐசோடோப்புகளை தனியார் உருவாக்க அனுமதிக்கப்படும். மருத்துவ துறையில் பயன்படும் கதிரியக்க தனிமங்களை தயாரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்