Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லி சிறையில் கைதிகளுக்கு வேகமாக பரவும் கொரோனா தொற்று

மே 17, 2020 06:59

புதுடெல்லி: டிடெல்லி சிறையில், 15 கைதிகளுக்கும், தலைமை வார்டனுக்கும், 'கொரோனா' வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ரோஹிணி சிறையில், சில நாட்களுக்கு முன், 28 வயது கைதிக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

க்ஷ, அவருடன் தொடர்பில் இருந்த, 19 கைதிகளுக்கும், ஐந்து சிறைத்துறை அதிகாரிகளுக்கும், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 16 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


இது குறித்து, சிறைத்துறை டி.ஜி.பி., சந்தீப் கோயல் கூறியதாவது:மருத்துவ பரிசோதனையில், 15 கைதிகள் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமை வார்டனுக்கும் வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள கைதிகள், பிறரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தலைமை வார்டன், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சில அதிகாரிகளும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து கைதிகளுக்கும், வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து, செய்யப்பட்டு வருகின்றன. சிறையில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்