Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும், மஹாராஷ்டிராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மே 17, 2020 08:56

மும்பை: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மஹாராஷ்டிராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பில் மஹாராஷ்டிரா மாநிலம் முன்னிலையில் உள்ளது. அங்கு 30,70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,135 பேர் உயிர் இழந்துள்ளனர். நாடு முழுவதும் 3ம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 4ம் கட்டமாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மஹாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்