Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கு நேரத்தில் மகன், மகளுக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்த பிரியங்கா

மே 18, 2020 06:34

புதுடெல்லி: நாடு முழுதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், சாலைகளில் நடமாட்டம் இல்லை. அனைவரும் வீட்டிற்குள்ளாகவே அடைந்து கிடக்கின்றனர்.

சோனியாவின் குடும்பத்திற்கு, இந்த ஊரடங்கு பெரிதாக உதவியுள்ளதாம். குறிப்பாக பிரியங்காவின் மகன், மகள் இதனால் பயனடைந்துள்ளனர். தங்கள் குழந்தைகளுக்கு, கார் ஓட்ட கற்றுக் கொடுக்க வேண்டும் என, பிரியங்காவிற்கு நெடுநாள் ஆசை. அதை இப்போது நிறைவேற்றி விட்டாராம்.

பிரியங்காவின் வீடு, டில்லியின் மைய பகுதியில், வி.ஐ.பி.,க்கள் வசிக்கும் பகுதியில் உள்ளது. அங்கு சாலைகள் மிகவும் விசாலமானவை. எப்போதும் வி.ஐ.பி.,க்களின் கார்கள் விரைந்து கொண்டிருக்கும். ஆனால், ஊரடங்கின் போது, போக்குவரத்தே இல்லை. இந்த தெருக்களில், தன் காரை எடுத்துக் கொண்டு மகன், மகளுக்கு பயிற்சி அளித்துள்ளார், பிரியங்காவின் கணவர், ராபர்ட் வாத்ரா.

காரின் முன் சீட்டில் இவர் அமர்ந்து கொள்ள, பின்னால் பிரியங்கா; டிரைவர் சீட்டில், மகன். அவரின் பயிற்சி முடிந்ததும், பிறகு மகளுக்கு பயிற்சி.

இப்படி, தினமும், இரண்டு மணி நேரம், டில்லியின் வி.ஐ.பி.,க்கள் சாலைகளில், கார் ஓட்ட பயிற்சி நடந்துள்ளதாம். முன்னாள் பிரதமர் குடும்பம் என்பதால், பாதுகாப்பிற்காக, இந்த பயிற்சி காருக்கு, முன்னும் பின்னும், தனி கார்களில் போலீசார் சென்றுள்ளனர்.

ஆனால், ராகுலுக்கு ஊரடங்கால் வருத்தம். அடிக்கடி இவர் இத்தாலி சென்று, அங்குள்ள தன் தாய் சோனியா வழி பாட்டியை சந்தித்து வருவார். பாட்டியின் மீது அதிக பாசம். இப்போது பாட்டியை சந்திக்க முடியவில்லை என வருத்தம். இதனால், தினமும் போனில், வீடியோ மூலமாக பாட்டியுடன் பேசி, தன் ஆசையை நிறைவேற்றி வருகிறார்.

தலைப்புச்செய்திகள்