Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் லட்சத்தில் 7 பேருக்கே கொரோனா தொற்று; சுகாதார அமைச்சகம்

மே 19, 2020 06:53

புதுடெல்லி: இந்திய மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேரில் 7.1 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 48 லட்சத்து 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. உலக சுகாதார அமைப்பு தரவின் படி, உலக மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேரில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிக பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் 494 பேருக்கும், இரண்டாம் இடத்தில் இருக்கும் ரஷ்யாவில் லட்சம் பேரில் 195 பேருக்கும், ஸ்பெயினில் இந்த மதிப்பில் 595 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் இதுவரை ஊக்கமளிக்கும் முடிவுகளையே காட்டியுள்ளன. இந்தியாவில் தற்போது இரட்டிப்பு விகிதம் அடைய 7 நாட்கள் என்ற அளவில் உள்ளன. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 38.29 சதவீதமாக உள்ளது. இந்திய மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேரில் 7.1 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்