Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்புக்கு அனுமதி

மே 21, 2020 08:17

சென்னை: சின்னத்திரை சீரியல்களுக்கு படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி இருக்கிறது.

உங்க இஷ்டத்துக்கு லாஜிக் இல்லாமல் எதையாவது சொல்லி கதையை வம்படிக்கு இழுப்பது, தேவை இல்லாமல் க்ளோசப் காட்சிகள் வைத்து டென்ஷனாக்குவது என்று பழையபடி உங்கள் பணிகளைத் தொடர்ந்துக்கொண்டே இருந்தீர்கள் என்றால் பேசாமல் மக்கள் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள். இந்த லாக்டவுன் நேரத்தில் உங்கள் தொலைக்காட்சிகளில் நீங்க முன்பு ஒளிபரப்பி வந்த பல சீரியல்களைத்தான் மறு ஒளிபரப்பு செய்தீர்கள். இப்படி நன்றாக சென்று கொண்டு இருந்த சீரியல்களில் இப்போது மட்டும் எப்படி இவ்வளவு இழுவை வந்தது என்று மக்களுக்கு தெரிவிக்கும்படிதான் இருந்தது உங்களின் மறு ஒளிபரப்பு சீரியல்கள்.

சீரியல் படப்பிடிப்புக்கு தமிழக அரசு சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறது. படப்பிடிப்பு சுற்றுச்சுவர் உள்ள வீடுகளில் மற்றும் அரங்குகளில் மட்டுமே நடக்க வேண்டும். படப்பிடிப்பு தளங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். காய்ச்சல் , சளி, இருமல் மூச்சுத்திணறல் கொண்ட நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு பணிசெய்ய அனுமதி அளிக்க கூடாது.

பொது இடங்களில் ஷூட்டிங் செய்ய வேண்டும் என்றால், வெளியூரில் மட்டுமே நடத்த வேண்டும். நடிகர், நடிகைகள் தவிர மற்றவர் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். பணி இல்லாத நேரத்தில் நடிகர், நடிகைகளும் முகக்கவசம் அணிய வேண்டும். சானிடைஸர் கொண்டு கைகளை சுத்தம் செய்வது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளை விதித்து, தொலைக்காட்சி சீரியல் ஷூட்டிங் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.

தலைப்புச்செய்திகள்