Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கடந்த 7 நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு

மே 21, 2020 08:22

புதுடெல்லி: இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு கொரோனா நோய் தொற்று 7 நாளில் வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்துள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் 5,000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 45,422 பேர் மீண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 5,611 பேருக்கு இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தான் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு ஆகும். கொரோனா தொற்றால் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 3,435 பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை நிலவரப்படி, இந்தியாவில் குணம் அடைவோர் விகிதம் 90 புள்ளிகள் உயர்ந்து 39.6% ஆக மேம்பட்டுள்ளது. இறப்பு விகிதம் மாறாமல் 3.1% ஆகவே உள்ளது. இந்தியாவில் நேற்று 3,264 கேஸ்கள் முடிவுக்கு வந்தன. இதில், 140 இறப்புகள் மற்றும் 3,124 பேர் குணம் அடைந்ததும் அடக்கம் ஆகும். மொத்தம் முடிவுக்கு வரும் கேஸ்களில் இறப்புகளின் பங்கு செவ்வாயன்று 5.4 சதவீதத்திலிருந்து 4.3 சதவீதமாகக் குறைந்தது. மொத்த புதிய கேஸ்களில் மீட்டெடுப்பு விகிதம் புதன்கிழமை மட்டுமே அதிகரித்துள்ளது.

இந்தியாவின் 5 நாளில் உயரும் சராசரி தினசரி வீதத்தின் மொத்த கேஸ்கள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து 5.4%. ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் கொரோனா பரவும் இரட்டிப்பு நேரம் 13.8 நாட்களில் இருந்து 12.8 நாட்களாகக் குறைந்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்த பாதிபபு இரட்டிப்பாக்குவது பஞ்சாபில் மிக அதிகமாக (62.7 நாட்கள்) உள்ளது. கர்நாடகாவில் (6.1 நாட்கள்) என மிக குறைவாக உள்ளது.

மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. தொடர்ச்சியாக மூன்று நாட்களாக சராசரியாக தினசரி 2,000 க்கும் அதிகமானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களில் அதன் மொத்த எண்ணிக்கை 17.3% அதிகரித்துள்ளது.. அதிகம் பாதிப்புக்குள்ளான இரண்டாவது மாநிலமான தமிழ்நாட்டில் 16 வது நாளாக 400க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த 16 நாளில் மட்டும் 9,435 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 76% கேஸ்கள் இந்த 16 நாட்களில் வந்துள்ளன.

சதவீத அடிப்படையில், அஸ்ஸாம் (33%), மணிப்பூர் (29%), கோவா (21%), உத்தரகண்ட் (19%), மற்றும் கோவா மற்றும் கர்நாடகா (தலா 12%) ஆகிய மாநிலங்களில் மொத்த கேஸ்கள் நேற்றைய நிலவரப்படி அதிகரித்துள்ளது. மே 14ம் தேதி 82 ஆயிரமாக இருந்த கொரோ பாதிப்பு மே 21ம் தேதியான நேற்று 1,12,359 ஆக உயர்ந்துள்ளது .இதன் மூலம் ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பாதிப்பு கடந்த 7 நாளில் வந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்