Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் சிக்கி தவித்த 104 ரஷ்யர்கள் மாஸ்கோ பயணம்

மே 22, 2020 07:58

திருவனந்தபுரம்: ஊரடங்கால் கேரள மாநிலத்தில் சிக்கி தவித்த 104 ரஷ்ய சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டிற்கு திரும்பி சென்றதாக கேரள சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்,

இது குறித்து அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறி இருப்பதாவது: கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் விமானநிலையங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக ஜெர்மனி, 232 இங்கிலாந்து 268, பிரான்ஸ்் 112 சுவிட்சர் லாந்து 115 பேர் உள்ளிட்ட 2 ஆயிரத்து 500 வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.

அதே நேரத்தில் அவர்கள் தங்குமிடம் வசதியாக இருக்கும்படியும், தொந்தர ஏதும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதில் மாநில அரசு கவனம் செலுத்தி உள்ளது. சுற்றுலாத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

104 பயணிகளுடன் ராயல் பிளைட் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் கோல்கட்டா மற்றும் யெகாடெரின்பர்க் வழியாக மாஸ்கோவுக்கு புறப்பட்டு சென்றது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மாநில சுற்றுலாத்துறை செயலாளர் ராணி ஜார்ஜ், சுற்றுலாப்பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் முன்னுரிமையாகும். பல்வேறு தடைகள் இருந்த போதிலும் பயணிகள் அனைவரையும் மிகச்சிறப்பான முறையில் கவனித்து கொண்டதற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என கூறினார்.

தலைப்புச்செய்திகள்