Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிணற்றில் மிதந்த 9 தொழிலாளர் சடலங்கள்: தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பு

மே 22, 2020 10:23

ஹைதராபாத்: யார் உடலிலும் எந்த காயங்களும் இல்லாத நிலையில் பாழுங்கிணற்றில் இருந்து  புலம்பெயர் தொழிலாளர்களின் 9 சடலங்களை போலீசார் மீட்டுள்ளனர். அதனால் இந்த 9 பேருமே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் ஒட்டுமொத்த பேரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் புறநகரில் ஒரு கிணறு உள்ளது. கீசுகொண்டா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி இது. இங்கு நேற்றுமுன்தினம் இரவு 5 பேர் கிணற்றில் விழுந்து இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. இதனால் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று அந்த கிணற்றில் விழுந்து கிடந்தவர்களை மீட்க ஆரம்பித்தனர். நீண்ட நேரம் போராடி 5 பேரின் உடல்களையும் மீட்டனர்.

இதனிடையே, நேற்று காலை கிணற்றில் மேலும் சிலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. அதனால் அவர்களை மீட்கும் பணி நடந்தது. மொத்தமாக மீட்கப்பட்டவர்களில் 6 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் எல்லோருமே புலம் பெயர் தொழிலாளர்கள் ஆவர். மேற்கு வங்கம், பீகாரை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இதில், கொடுமை என்னவென்றால், இவர்களில் யார் உடலிலும் எந்த காயமும் இல்லை. அதனால் 9 பேருமே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

வாரங்கால் மாவட்டத்தில் உள்ள கோரே குந்தா என்ற கிராமத்தில் ஒரு பேக் தயாரிக்கும் பேக்டரி இயங்கி வருகிறது.. இதற்கு பக்கத்தில்தான் இந்த கிணறு உள்ளது. இது குறித்து கீசுகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் 20 வருஷத்துக்கும் மேலாக வேலை பார்த்து வந்தவர்களாம். இந்த 9 பேரில் 3 வயது குழந்தையும், 2 வயது குழந்தையும் அடக்கம் என்பது நெஞ்சை பிளக்கும்  தகவலாகும். ஒரே கிணற்றில் கடந்த இரண்டே நாட்களில் 9 பேரின் சடலங்கள் மிதந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்