Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுவையில் 2 மாதங்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறப்பு

மே 25, 2020 07:48

புதுச்சேரி: புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு பிறகு மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில், புதுச்சேரியில் இன்று முதல் மதுபானக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

 காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுபானங்கள் விற்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்துக்கு இணையாக 3 மடங்கு வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மதுபிரியர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.

இதனிடையே முந்தைய நாட்களில் தடையை மீறி மதுவிற்ற 102 கடைகள் மட்டும்  திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்