Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரம்ஜான் பண்டிகை: கரூரில் அமைச்சர் இனிப்பு வழங்கல்

மே 25, 2020 08:59

கரூர்: தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை கொண்டாடிய நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சமுதாய மக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு பரிசு பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில், கரூர் நகர ஜமாத் சார்பில் ஜமாத் உறுப்பினர்கள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில், கரூர் மத்திய நகர அ.தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சாதிக், நகர தலைவர் சபிபுல்லா பட்ஷா, வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் முகமது யூசுப், வார்டு செயலாளர் முகமது இப்ராஹிம், சிறுபான்மை பிரிவு ஹஜரத் ஹக்கீம், இஸ்மாயில், வார்டு செயலாளர் ஜெய்னுலாப்தீன் மற்றும் மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்