Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மானியத்துடன் அம்மா ஸ்கூட்டர்: அமைச்சர் காமராஜ் வழங்கினார்

மே 26, 2020 06:54

திருவாரூர்: திருவாரூரில் 216 பேருக்கு மானியத்துடன் கூடிய அம்மா ஸ்கூட்டரை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் கூடிய அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு 216 மகளிருக்கு ரூ.54 லட்சம் மானியத்துடன் கூடிய அம்மா ஸ்கூட்டர்களை வழங்கினார். பின்னர் சுய உதவிக்குழுக்களுக்கு கொரோனா சிறப்பு கடன்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு திறம்பட செயலாற்றியதால் உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது. அரசு தெரிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருந்தால் கொரோனாவை கண்டு அச்சமடைய தேவையில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.7 கோடி கடன் வழங்க வாய்ப்புள்ளது.

மேலும் இதுவரை 3558 உழைக்கும் மகளிருக்கு ரூ.8 கோடியே 88 லட்சம் மானிய தொகையுடன் அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடையில் ஏப்ரல் மாதத்திற்கு முழுமையாக பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மே மாத பொருட்கள் 93 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்கு ரேஷன் பொருட்கள் எப்போது வழங்கப்படும் என்பதை முதல்-அமைச்சர் அறிவிப்பார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்