Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியில் காங்., எம்.எல்.ஏ

மார்ச் 14, 2019 01:00

ஐதராபாத் : காங்கிரஸ் எம்.எல்.ஏ சபிதா இந்திரா ரெட்டி, தெலுங்கானா ராஷ்டிரிய சமாதி கட்சியில் இணைந்தார். தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில், முன்னாள் அமைச்சரும் காங். எம்.எல்.ஏ வுமான சபிதா இந்திரா ரெட்டி முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்தார். அவர் முன்னிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.,) கட்சியில் இணைந்தார். சபிதாவின் 3 மகன்களும் உடனிருந்தனர்.  
முதல்வருடனான 2 மணி நேர சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபிதாவின் மகன் கார்த்திக் ரெட்டி , சட்டப்பூர்வமாக நாங்கள் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்து விட்டோம். இது மரியாதையான சந்திப்பு. அரசியல் ரீதியாக சில முக்கிய கருத்தக்களை பரிமாறினோம். இவ்வாறு கூறினார்

தலைப்புச்செய்திகள்