Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பாதிப்பில் இதுவரை சிக்காத லட்சத்தீவு

மே 26, 2020 10:34

புதுடெல்லி: இந்தியாவில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் பரவியுள்ள கொரோனா வைரசால், லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தில் மட்டும் இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு மட்டும் 3.48 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவியது. இந்தியாவில் இதுவரை 1,45,380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 4,167 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வளவு நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலங்களாக திகழ்ந்த நாகாலாந்து மற்றும் சிக்கிம் மாநிலங்களிலும் சமீபத்தில் பரவியது.

நாகாலாந்தில் நேற்று 3 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இவர்கள் 3 பேரும் சிறப்பு ரயில் மூலம் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் ஆவர். மேலும், சிக்கிம்-ல் கடந்த 23ம் தேதி ஒரே ஒரு பாதிப்பு நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், 36 தீவுகளை கொண்ட லட்சத்தீவுகளில் 64 ஆயிரம் பேர் வசிக்கும், லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசங்களில் மட்டுமே இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.

தலைப்புச்செய்திகள்