Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தடுமாறும் கட்டுமானம், ரியல் எஸ்டேட் துறை: புலம்பெயர் தொழிலாளர் இல்லாததால் சிக்கல்

மே 26, 2020 10:44

சென்னை: இந்தியா முழுவதும் லாக்-டவுனில் பல தளர்வுகள் இருந்தாலும், புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், கட்டுமானம், ரியல் எஸ்டேட் துறை, தொழில் நிறுவனங்களில், பணியாளர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

சமூக பாதுகாப்பு அம்சங்கள் கிடைக்காத அமைப்பு சாரா தொழிலாளர்களின் கையில் உள்ள கடைசி காசுவரை செலவு செய்துவிட்டு வறுமையில் வாடுகின்றனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தொழிலாளர்களை, பல்வேறு மாநில அரசுகள் பேருந்துகள் மூலம் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வருகின்றன. பலரும் நடந்தே செல்லும் அவல நிலை உள்ளது.

ஊரடங்கு 4வது முறையாக நீட்டிக்கப்பட்டாலும், சில கட்டுப்பாடுகளுடன் தொழிற்சாலைகள் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சூழ்நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதால், கட்டுமானம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

இது தொடர்பாக ஆய்வு நிறுவனங்கள், பல்வேறு துறைசார் நிபுணர்களிடம் ஆய்வு மேற்கொண்ட போது, பொது முடக்கம் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் பொது முடக்கம் முடிந்தாலும், 40 சதவிகித தொழிலாளர்கள் தங்கள் பணிக்கு திரும்புவார்கள் என தெரிவித்ததாக அந்த ஆய்வு நிறுவனம் கூறி உள்ளது.

இதனால் கட்டுமானத் துறைக்கு 59 சதவிகிதம் அளவிற்கும், ரியல் எஸ்டேட் துறையில் 30 சதவிகிதம் அளவிற்கும், உற்பத்தி துறையில் 29 சதவீதம் அளவிற்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். கட்டுமான துறையில் பணிகள் வேகமாக நடந்தால்தான், பொருளாதார மந்த நிலை விரைவில் நீங்கும். ஆனால், தொழிலாளர் பற்றாக்குறை, அந்த துறையை நாள்தோறும் அச்சுறுத்தி வருகிறது.

மேலும், வாகனத் துறையில் 29 சதவிகிதம், உட்கட்டமைப்பு துறையில் 24சதவிகிதம், ஜவுளித்துறையில் 22 சதவிகிதமும், வேளாண்துறையில் 17 சதவீதமும் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்