Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நோட்டாவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 60 லட்சம்

மார்ச் 15, 2019 05:25

லோக்சபா: தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளர் மீதும் உங்களுக்கு திருப்தி இல்லையா... அதே நேரத்தில் ஓட்டளிக்கும் ஜனநாயகக் கடமையையும் செய்ய விரும்புகின்றீரா... உங்கள் ஓட்டு தவறாகப் பயன்படுத்தப்படுவதை விரும்பவில்லையா... இதற்கெல்லாம், 'ஆம்' என்பது உங்களுடைய பதில் என்றால், உங்களுக்காகவே, 'நோட்டா' எனப்படும், 'மேல்கூறிய எவருக்கும் இல்லை' என்பதை குறிக்கும் வகையில், உங்கள் ஓட்டைப் பதிவு செய்ய முடியும். 

எவருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்றால், முன், '49ஓ' என்ற சட்டப் பிரிவின்படி, தேர்தல் அதிகாரியிடம் கூறி, அதற்கான பதிவேட்டில் குறிப்பிடலாம். ஆனால், இதில், வாக்காளரின் விபரங்கள் தெரியவரும்.அதனால், வாக்காளரின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டதே, நோட்டா. உச்ச நீதிமன்றம், 2013ல் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தி லும், நோட்டா இடம்பெற்றுள்ளது. இயந்திரத்தின் கடைசி வரிசையில், இதற்கான வாய்ப்பு தரப்பட்டுள்ளது.இந்த நோட்டா, முதல் முறையாக, 2013ல், ஐந்து மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.அப்போது, 15 லட்சம் பேர் இதை பயன்படுத்தினர். ஆனால், மொத்த வாக்காளர்களில், நோட்டாவின் எண்ணிக்கை, 1.5 சதவீதமாகவே இருந்தது. 

கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும், 60 லட்சம் பேர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உள்ளனர். ஆனாலும், நோட்டாவால் தேர்தல் முடிவில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஒரு குறிப்பிட்ட தொகுதியில், நோட்டாவுக்கு அதிகமான ஓட்டு பதிவானாலும், அதற்கடுத்த இடத்தில் உள்ளவரே, வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.இருந்தாலும், தேர்தல் சீர்திருத்தம் மேற்கொள்ளவும், கட்சிகள் தங்களுடைய வேட்பாளர் தேர்வில் கவனமாக இருக்கவும், இது உதவும். 

கடந்தாண்டு இறுதியில் நடந்த, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிஜோரம் சட்டசபை தேர்தல்களில், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளைவிட, நோட்டாவுக்கு அதிக ஓட்டுகள் பதிவாயின. 



 

தலைப்புச்செய்திகள்