Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீரர்கள் ஓட்டு யாருக்கு?

மார்ச் 15, 2019 05:33

உத்தரபிரதேசம்: உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகள், கூட்டணி அமைத்து, அண்டை மாநிலமான, உத்தரகண்டில் போட்டியிட்டாலும், அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவே.'வெற்றி வாய்ப்பு என்ன, அவர்களால், தேர்தலில் எந்த சிறு பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது' என, காங்., மூத்த தலைவர் கள் கூறி வருகின்றனர். 
பா.ஜ., மற்றும் காங்., இடையே தான் இந்த ஐந்து தொகுதிகளிலும் நேரடி மோதல் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தெஹ்ரி கர்வால், அல்மோரா, நைனிடால், ஹரித்வார் தொகுதிகளில், பகுஜன் சமாஜ் கட்சியும், போரி கர்வால் தொகுதி யில், சமாஜ்வாதியும் போட்டியிட உள்ளன. 

வலுவான பா.ஜ.,கடந்த லோக்சபா தேர்தலைப் போலவே, வரும் லோக்சபா தேர்தலிலும், ஐந்து தொகுதிகளிலும் மீண்டும், பா.ஜ.,வே வெற்றி பெறும் என, பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு முக்கிய காரணம், சமீபத்தில் பாக்., பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள்.விவசாயம், தொழில் துறை, சேவைத் துறைகளில் அதிக அளவு வேலை வாய்ப்பு, உத்தரகண்டை சேர்ந்தவர்களுக்கு கிடையாது. 

அதனால், இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், முப்படைகளில் அதிக அளவில் பணியாற்றுகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவரான, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல், இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர். ராணுவத் தலைமை தளபதி, பிபின் ராவத்தும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்.கடந்த, 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 70 தொகுதிகளில், 57ல் பா.ஜ., வென்றது. சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ.,வுக்கு பலர் சென்ற பாதிப்பில் இருந்து, காங்., இன்னும் மீளவில்லை. 

இதுவும், பா.ஜ.,வுக்குசாதகமாகவே உள்ளது.ஒருவேளை, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி அமைத்திருந்தால், ஹரித்வாரில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், அந்த அபாயமும் தற்போது இல்லாதது, பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளது.கடந்த லோக்சபா தேர்தலின் போது, 61.6 சதவீத ஓட்டுகள் பதிவானது. அப்போது, காங்., வசமிருந்த, ஐந்து தொகுதிகளையும், பா.ஜ., வென்றது. தற்போது, மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருப்பதுடன், மேற்கூறிய காரணங்களால், பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளது.

தலைப்புச்செய்திகள்